Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
District Collector extended her greeting to the students of Perambalur Sports Hostel who had won medals in National and State Level Competitions - 18.02.2025

தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றனர் – 18.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025

தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.. அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.(PDF 38KB)

மேலும் பல
Surprise inspection by the District Collector in the residential areas under Perambalur Municipality - 18.02.2025

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு – 18.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடு, குடியிருப்புகளில் குப்பைகளை தரம்பிரித்து சேகரம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல
Thirteen persons who had been released from alcohol related offences and expressed repentance for their action received milch cows from the District Collector - 17.02.2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரூ.6.50 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனந்திருந்திய 13 நபர்களுக்கு வழங்கினார் – 17.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனந்திருந்திய 13 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மறுவாழ்வு நிதியின் கீழ் தலா ரூ.50,000 வீதம் ரூ.6.50லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for the general public - 17.02.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.18 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
Hon'ble Minister of Human Resource Management inspected the Phoenix Kothari Footwear Manufacturing Factory - 15.02.2025

ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலையினை மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அவர்கள் பார்வையிட்டார் – 15.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025

எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலையினை மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி.என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல
Combined Committee Meeting held by the Forest Department - 14.02.2025

வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழு கூட்டம் – 14.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், பெரம்பலூர் வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றம், பசுமைக்குழு, ஈரநில மேலாண்மைக் மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல
Meeting on promoting the use of DRUG FREE TN Mobile App - 12.02.2025

DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து விளக்கக் கூட்டம் – 12.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025

DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Mass Contact Program - 12.02.2025

மக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 12.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025

புது நடுவலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 192 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்..(PDF 38KB)

மேலும் பல
Monday GDP Meeting - 10.02.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
National Deworming Day - 10.02.2025

தேசிய குடற்புழு நீக்க நாள் – 10.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார் .(PDF 38KB)

மேலும் பல